டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக முதல்வரின் ஆலோசகர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டு 25ந்தேதி தொற்று உறுதியான நிலையில், முதல்வர் மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார். இதையடுத்து, மாநில சட்டமன்ற கூட்டத்தொடரும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்-துக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனால், மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதுடன், மாநில சட்டமன்ற கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel