தியோபன்ட்:

நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம் என மாயவதி,அகிலேஷ், அஜீத்சிங் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி அறிவித்துள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சவாலாக இந்த மெகா கூட்டணி திகழும் என்று தெரிகிறது.  இந்நிலையில், இந்த கூட்ணியின் முதல் கூட்டம் தியோபன்டில் நடந்தது.

இதில் பேசிய அஜீத்சிங், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்றார்.

அகிலேஷ் யாதவ் பேசும்போது, மக்களவை தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எங்களது மெகா கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுக்கும் என்றார்.