லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,979-ஆக அதிகரித்துள்ளது.  40,019 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 18,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவிலிருந்து 3,90,566 பேர் குணமடைய, குணமடைவோர் விகிதம் 89.37 சதவிகிதமாக உள்ளது.  புதியதாக 48 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 3,348 ஆக உள்ளது.
மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.18 கோடியாக அதிகரித்துள்ளது.