லக்னோ:

உத்தர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  2017ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கான் தலைமையிலான மருத்துவர்கள் பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு செப்டம்பர் 21ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டு 3 பித்த கற்களை அகற்றினர். பித்தப்பையும் நீக்கப்பட்டது.

தற்போது இந்த அறுவை சிகிச்சை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் பிறந்து 271 நாட்கள் ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. அதனை இந்த சாதனை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.