சேலம்
பெண்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
தற்போது மாநிலம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின், ” சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. ஆயினும், தமிழக மக்கள் திமுக-வை கைவிடவில்லை. முதல்வர் ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் பல நல்ல திட்டங்களைத் தந்துள்ளார்.
ஆட்சியை விட்டுச் சென்ற அதிமுக ரூ.5.75 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றதுடன், கஜானாவை காலி செய்து சென்றனர். ஆயினும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும், திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திமுக அறிவித்தபடி பெண்களுக்கான உரிமைத் தொகை விரைவில் கொடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.