திருச்சி
திருவெறும்பூர் அருகே உஷா என்னும் பெண் மரணமடைந்த விவகாரத்தில் ஆய்வாளர் காமராஜுக்கு நீதி மன்றக் காவல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜா என்பவரை விரட்டிச் சென்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் வண்டியை உதைத்தார். இதனால் ராஜாவின் பின்னே அமர்ந்து பயணம் செய்த அவர் மனைவி உஷா கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டடை தொடர்ந்து ஆய்வாளர் காமராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது திருச்சி மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் காமராஜ் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.