வாஷிங்டன்: அமெரிக்காவில் 27வது நாளாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,84,650 ஆக உள்ளது.
ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 2,66,875 ஆக அதிகரித்து உள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸ் பரவலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நாடு அமெரிக்காவாகும். அதிகம் பாதிப்பு, பலி எண்ணிக்கை என இரண்டிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel