அமெரிக்கா: அதிபர் டிரம்புக்கு சிஐஏ இயக்குநர் எச்சரிக்கை!

Must read

வாஷிங்டன்,
மெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்டு டிரம்புக்கு அமெரிக்க சிஐஎ இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டால் அது பேரழிவாக அமையும் என்று கூறி உள்ளார்.

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹலிரி கிளின்டனை தோற்கடித்து, டிரம்ப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
டிரம்பின் அதிரடியான பேச்சு குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமாக சிஐஏ-வின் இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது,
சிஐஏ பிரன்னன்
சிஐஏ பிரன்னன்

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும்
புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது.
இதில் டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு பிரன்னன் கூறி உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article