புதுடெல்லி:

முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியா மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.


இந்தியாவுக்கு அளிக்கும் வர்த்தக முன்னுரிமையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கடந்த 5-ம் தேதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

இதனையடுத்து, அமெரிக்க வர்த்த பிரதிநிதி ராபர்ட் லித்தீஜரிடமிருந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, அமெரிக்க முன்னுரிமை திட்டத்தின் பொதுவான முறையின் கீழ் இந்தியா தனிப்பட்ட பெரும் பயனாளியாக இருக்கிறது.

2017-ம் ஆண்டு மட்டும் வரி இல்லாமல் 5.7 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

இந்தியாவுக்காக கவலைப்படுதிலேயே நாங்கள் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளோம்.
இந்தியாவுடன் எங்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளன. அது குறித்து சில மாதங்களாக நாங்கள் கேள்வி எழுப்பி வருகிறோம்.

வர்த்தகத்தில் எங்களை வெறுப்பேற்றும் வகையில், இந்தியா முறையற்ற வகையில் நடந்து கொண்டிருக்கிறது.

இதனால் இந்தியா மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.