சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரைப் புறக்கணிக்கும் அமெரிக்கா

Must read

வாஷிங்டன்

ரும் பிப்ரவரி மாதம்  சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே மூண்ட வர்த்தகப் போர் தற்போது அரசியல் போராக உருவெடுத்துள்ளது அறிந்ததே.   இந்த தாக்கம் இருநாடுகளுக்கிடையே கடும் பிளவை ஏற்படுத்தி வருகிறது.   சீனாவின் பல நிகழ்வுகளை அமெரிக்கா புறக்கணிப்பதும் இதற்குச் சீனா எச்சரிக்கை விடுவதும் வழக்கமான ஒன்றாக மாறி உள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்த போட்டியைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  சீனாவில் வடமேற்கில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உல்குர் முஸ்லிம்களுக்கு எதிராகச் சீனா மனித உரிமை மீறல் நடத்தி வருவதற்குக் கண்டனம் தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கழகம், ”விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர் மற்றும் வீராங்கனைகளை அனுப்புவதும் அனுப்பாததும் அந்தந்த நாடுகளின் விருப்பம் ஆகும்.  இதில் நாங்கள் தலையிட முடியாது” எனத் தெரிவித்துள்ளது.  அதே வேளையில் சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சரியான எதிர்வினை கிடைக்கும் என எச்சரித்துள்ளது.

More articles

Latest article