சான்பிரான்சிஸ்கோ: குடியேறாதோருக்கான விசாக்களை இந்தாண்டின் இறுதிவரை தடைசெய்த அமெரிக்க அரசின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த தடையின் மூலம், கிரீன் கார்டுகள் மற்றும் குடியேறாதோருக்கான விசாக்களான H-1B மற்றும் L-1 ஆகியவற்றைப் பெற முடியாது.
“ஆப்பிள் போன்ற நிறவனங்கள், குடியேறிகளின் தேசமான இது, வேறுபாடுகளின் மூலமே பலம் பெறுகிறது. அதன்மூலமே அமெரிக்காவின் கனவுகள் சாத்தியப்படும்” என்று டிவீட் செய்துள்ளார் டிம் குக்.
அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் அதிகளவு வெளிநாட்டினர் H-1B பெறக்கூடியவர்களே.
கூகுள் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் டெல்ஸாவின் எல்சான் மஸ்க் ஆகியோரும் அமெரிக்க அரசின் இந்த விசா தடை நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.