புது டெல்லி:
காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே மில்லியன் கணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம், பிசிஜி குழந்தை பருவ தடுப்பூசி தொடர்பான தேசிய கொள்கைகளுடன் இணைக்கப்படலாம். இத்தாலி மற்றும் அமெரிக்காவின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி நியூயார்க் தொழில்நுட்ப நிறுவனம் (NYIT) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பி.சி.ஜி தடுப்பூசியின் உலகளாவிய கொள்கைகள் இல்லாத நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்றவை உலகளாவிய மற்றும் நீண்டகால பி.சி.ஜி கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்று கோன்சலோ ஒட்டாசு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
4,000-க்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா கிட்டத்தட்ட 1,90,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இத்தாலியில் 1,05,000 கொரோனா பாதிப்பு 12,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் உள்ளன. நெதர்லாந்து 12,000 க்கும் கொரோனா பாதிப்புகளுடன், 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
சமீபத்தில் வெளியான ஆய்வின் படி, கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கBCG தடுப்பூசியை முக்கியமான பொருளாக மாற்றக்கூடும்.
பி.சி.ஜி தடுப்பூசி இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ந்து வருகிறது. மேலும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு பிறக்கும் போதோ அல்லது அதற்குப் பிறகோ பிசிஜி தடுப்பூசி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.