ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

எண்ணெய் வணிகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை ஈரான் தனது அணுஆயுத திட்டத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஃபோனிக்ஸ் கப்பல் ஆபரேட்டர்கள் விஷன் ஷிப் மேனேஜ்மென்ட் LLP மற்றும் டைட்ஷிப் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் (OPC) பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் PHONIX 2022 முதல் பல லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, லைபீரியா, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக விநியோகிக்கும் “நிழல் கடற்படையின்” ஒரு பகுதியாகும், இதன்மூலம் பிராந்தியத்தை சீர்குலைக்கும் ஈரானின் திட்டத்திற்கு இவை மறைமுகமாக உதவி வருகின்றன என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.