வாஷிங்டன்: சமீபத்தில் வெளியிடப்பட்ட கடந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
* அந்த அறிக்கையில், மோடி அரசினால் வெளிநாட்டு நிதியில் இயங்கும் 15,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGO) உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான குறுகிய காலத்தில், நீதிமன்ற காவலில் நிகழ்ந்த 1530 மரணங்கள் குறித்தும், போலீஸ் காவலில் நிகழ்ந்த 144 மரணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
* காவல்துறையினருக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியம், பணிச்சுமை, அரசியல் அழுத்தங்கள் மற்றும் அத்துறையில் நிலவும் ஊழல் ஆகியவை குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
* காஷ்மீர் போன்ற மாநிலங்களில் நிகழும் சிவிலியன் மரணங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 2016 முதல் ஏப்ரல் 2018 வரையான காலகட்டங்களில் 130 – 145 வரையான சிவிலியன்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.
* மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
* ஊடகங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
– மதுரை மாயாண்டி