சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், துணைஅதிபர் கமலா ஹாரிசை விட டிரம்ப் கூடுதலாக 3 மாநிலங்களில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை அறிய, அதாவது, 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்களிக்க மொத்தம் 18.65 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஏற்கனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த சில தேர்தல்களில் இல்லாத அளவில், இந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.
ஜார்ஜியாவில் கமலா ஹாரிஸை விட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து 12% முன்னிலை வகிக்கிறார். 10 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டொனால்ட் ட்ரம்ப் 95 இடங்களில் முன்னிலையும், கமலா ஹாரிஸ். 35 இடங்களில் முன்னிலையும், இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமலா ஹாரிஸ் வென்ற மொத்த மாநிலங்கள்:
- இல்லினாய்ஸ்
- டெலவேர்
- நியூ ஜெர்சி
- வெர்மான்ட்
- மேரிலாந்து
- கனெக்டிகட்
- மாசசூசெட்ஸ்
- ரோட் தீவு