கமலா ஹாரிஸை விட டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார்.

டிரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து பைடன் விலகியதை அடுத்து கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார்.

இதற்கு அமெரிக்க மக்கள் மத்தியில் ஆதரவு இருந்த நிலையில் தற்போது கமலா ஹாரிஸுக்கான ஆதரவு சரிந்துள்ளது.

கடந்த காலங்களில் அவர் அரசியலில் எந்த ஒரு நிலையான கருத்தையும் கொண்டில்லை என்றும் கமலா ஹாரிஸ் குறித்து மேலும் அறிந்து கொள்ள வெளியுள்ளதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் 9 சதவீதம் மட்டுமே என்ற நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த இந்த தகவல் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, 48 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், கமலா ஹாரிஸுக்கு 47 சதவீதம் மட்டுமே ஆதரவு உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதனால் டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே நாளை நடைபெற உள்ள தொலைகாட்சி விவாத நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.