வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக டெலாவேர் மாகாணத்தின் மாநில செனட்டர் பதவிக்கு சாரா மெக் ப்ரைட் என்ற திருநங்கை போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, சாரா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவின் தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக பதவியேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஏற்கனவே திருநங்கைகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், மாநில செனட்டர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் திருநங்கை இவரே ஆவார்.
Patrikai.com official YouTube Channel