நியூயார்க்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவர் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்கள் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.