வாஷிங்டன்

மெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் அந்நாட்டு அதிபர் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற போது ரஷ்யாவின் உதவியுடன் முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.   அதைத் தொடர்ந்து அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.  அவர் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் அவர் சதித் திட்டம் தீட்டி உள்ளதாக அடுத்த புகார் எழுந்தது.   இவர் மீதான புகார்களை அடுத்து டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நடந்தது.

அமெரிக்க நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த வாக்கெடுப்பில் பதிவான 229 வாக்குகளில் 189 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன.   இது டொனால்ட் டிரம்ப்புக்கு மிகவும் பேரிடியாக அமைந்துள்ளதாக உலக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.