அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சோலார் விண்ட்ஸ் மின் பகிர்மான நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா-வில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தொடர் சைபர் தாக்குதல் நடத்தி ரஷ்யா-வை நிலைகுலைய செய்ய பைடன் அரசு தயாராகி வருகிறது.
மறைமுக தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா, இந்த தாக்குதல் நிகழ்ந்த பின் ரஷ்யா-வுக்கு மட்டுமே இது குறித்து தெரியவரும், வெளியுலகிற்கு இது புலப்படாத வகையில் ஒரு தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் ரஷ்யா-வை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளையில், அமெரிக்காவில் நடந்த மின் தடைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இது வழக்கம் போல் எங்கள் மீது பழிபோடும் அமெரிக்காவின் தந்திரம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.