நியூயார்க்

மெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார்.

டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி மிகவும் பிரபலமானதாகும்.   சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பது பல வீரர்களின் கனவாக உள்ளது.   இந்த வருடத்துக்கான போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் நேற்று நடததது.

நேற்று நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் உடன் நோவக் ஜோகோவிச் மோதினார்.   ஆரம்பத்தில் இருந்தே இந்த போட்டியில் மெட்வதேவ் முன்னிலையில் இருந்தார்.  அவர் இந்த போட்டியில் 6-4,6-4,6-4 என்னும் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஜோகோவிச் தொடர்ந்து 5 போட்டிகளாக முதல் செட்டில் பின் வாங்கி வருகிறார்.  இந்த போட்டியின் சாம்பியன் பட்டத்தை ரஷ்ய வீரர்  டேனில் மெட்வதேவ் வென்றுள்ளார்.    இதன் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த பட்டத்தைப் பெற்ற ரஷ்யர் என்னும் பெருமையை அடைந்துள்ளார்.