அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கும் எலான் மஸ்கிற்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை அடுத்து டிரம்ப்-க்கு ஆதரவாக உலக பணக்காரரான எலன் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சனிக்கிழமையன்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மஸ்க் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வீதத்தில் தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதேபோல் ஒவ்வொரு நாளும் குலுக்கள் முறையில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் ஒருவரை தேர்வு தலா 1 மில்லியன் டாலரை வழங்கி வருகிறார்.
எலன் மஸ்க்-கின் இந்த செயல் அமெரிக்க தேர்தல் விதிகளுக்கு மாறானது என்று வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து எலன் மஸ்கின் இந்த நடவடிக்கை அமெரிக்க தேர்தல் விதிகளுக்கு மாறானது எனவும், இதுபோன்று பணப்பரிசு வழங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க நீதிமன்றம் எச்சரித்துள்ளது.