அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்துவருவதாகவும் அமெரிக்க மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்து வேறுபாட்டை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 5 தேர்தலுக்குப் பிறகு 2025 ஜனவரி 20ல் புதிதாக தேர்வு செய்யப்படும் அதிபர் பதவியேற்புக்கு இடையிலான காலகட்டத்தில் இந்த ஜனநாயக சீர்குலைவு வேலைகளில் இறங்க அந்நாடுகள் திட்டமிட்டுள்ளதாக குற்றசாட்டியுள்ளது.

அமெரிக்காவில் போராட்டங்களை நடத்த ரஷ்யா ராணுவ கைக்கூலிகள் மூலம் சில அமெரிக்கர்களை இந்த ஆண்டு துவக்கத்தில் பணியில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுக்குப் பின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் பகுதியில் நடத்திய வன்முறையை மேற்கோள் காட்டிய அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் வன்முறைகள் ஊக்குவிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நாளுக்கும் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கும் இடைப்பட்ட காலப்பகுதி, கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க முறைகேடுகள் குறித்த தவறான கூற்றுக்கள் பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் நிர்வாகம் விலகியது மற்றும் ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

தவிர, தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப்-பை கொல்ல ஈரான் முயற்சி மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் ? டிரம்ப் தோற்றால் மீண்டும் கலவரம் ? ஜெயித்தால்…