வாஷிங்டன்
அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளை வட கொரியாவுக்கு விதித்துள்ளது.
வடகொரியா நாடு நடத்தி வரும் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு உள்ளது. இதற்காக ஐ நா பல தடைகளை விதித்தும் வட கொரியா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. வடகொரியாவின் இந்த செய்கைகளுக்கு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை வடகொரியாவுக்கு விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “வட கொரியா பலமுறை எச்சரித்தும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் வட கொரியாவுக்கு உதவி செய்யும் 56 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரைவில் கருவூலத் துறை இவற்றுக்கான வருவாய் மற்றும் எரிபொருள் ஆதாரங்களை துண்டிக்கும் புதிய நடவடிக்கைகள தொடங்க உள்ளது. தற்போது தடை விதிக்கப்பட்டதினால் இனி வட கொரியாவுக்கு அணு ஆயுதப் பொருட்கள் மற்றும் ஏவுகணை தயாரிப்புக்கான பொருட்கள் கிடைப்பது நிறுத்தப் படும்.” என தெரிவித்ட்துள்ளார்.