பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதை அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை செய்துள்ளது.
இதையடுத்து, அரசு வழங்கிய சாதனங்களில் அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை முறையாகத் தடை செய்துள்ளது.

பிரதிநிதிகள் சபை தலைமை நிர்வாக அதிகாரி (CAO) இந்த செயலியின் பாதுகாப்பு குறித்து கவலைதெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“பயனர் தரவைப் பாதுகாக்கும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவு குறியாக்கம் இல்லாதது மற்றும் அதன் பயன்பாட்டில் உள்ள சாத்தியமான பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக வாட்ஸ்அப்பை பயனர்களுக்கு அதிக ஆபத்து என்று சைபர் பாதுகாப்பு அலுவலகம் கருதியுள்ளது,” என்று CAO ஒரு குறிப்பில் கூறியதாக Axios தெரிவித்துள்ளது.
அதற்காக, ஹவுஸ் ஊழியர்கள் அதன் மொபைல், டெஸ்க்டாப் அல்லது வலை உலாவி பதிப்புகள் உட்பட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு சாதனத்திலும் செயலியைப் பதிவிறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இதே காரணங்களைக் கூறி ஈரான் நாட்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு எதிரான கருத்து எழுந்தது குறிப்பிடத்தக்கது.