நியுயார்க்:

பிரபல சமூக வலைதளமான முகநூல் இணையதளத்துக்கு அமெரிக்கா 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 34,280 கோடி)  அபராதம் விதித்துள்ளது.  தனிநபர் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக  விவகாரத்தில், அமெரிக்க வர்த்தக ஆணையம் அதிரடியாக இந்த அபராத்தை செலுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது,  சுமார் 9 கோடி அமெரிக்கர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  பேஸ்புக் மூலம் கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திருடி, அதை தேர்தலுக்கான பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது தொடர்பான விசாரணையின்போது, நேரில் ஆஜரான , பேஸ்புக் நிறுவனத்தின் தவறும் இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டதோடு மன்னிப்பும் கோரினார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இதில், தனிநபர் தகவல்களை பிறருக்கு பகிர்வது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையத்துடன் செய்து உடன்பாடுகளுக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ. 34,280 கோடி (500 பில்லியன் டாலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]