பிரான்சிஸ்கோ:
தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட 20 வயதான அலெக்ஸ் க்யரின்சின் குடும்பத்தினர், அவரது தவறான மரணத்திற்காக பங்கு வர்த்தக பயன்பாடான ராபின்ஹூட் மீது வழக்கு தொடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் க்யரின்ஸ் தற்கொலை செய்துகொண்டார், ஏனெனில் ராபின்ஹூட்லிருந்து 1,70,000 டாலர்கள் வரும் என நம்பி 7,30,000 டாலர்களை அவர் இழந்துவிட்டார்.
க்யர்ன்ஸ் ராபின்ஹுட்டை நான்கு தடவை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார், ஆனால் தொடர்பு கொள்ள இயலாமல் ஒரு தானியங்கி செய்தி மட்டுமே வந்துள்ளது, அவர் இறந்த மறுநாளே அவர் பணம் செலுத்த வேண்டியதில்லை என வேறு ஒரு தானியங்கி செய்தியும் வந்துள்ளது.
புகாரின்படி ராபின்ஹூட் எந்த ஒரு கடனையும் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் ராபின்ஹூட் மூலமாக வந்த தானியங்கி செய்தி அவர் உடனடியாக 8 ஆம் தேதிக்குள் 1,78,612.73 டெபாசிட் செய்ய வேண்டுமெனவும், இதற்கு உடனடி நடவடிக்கை தேவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த அலெக்ஸ் க்யரின்ஸ் தற்கொலை செய்துகொண்டார், இவ்வாறான பல வழக்குகள் ராபின்ஹூட் நிறுவனத்தின் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.