புதுடெல்லி:
மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க மாணவர்களுக்கு புதிய செயலியை அமெரிக்க தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க அங்குள்ள பல்கலைக்கழகங்களை தேர்வு செய்தனர்.
இந்தியாவிலேயே ஐதராபாத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்க செல்கின்றனர்.
பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் சரியான வழிகாட்டுதலின் படியே மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும்.
மோசடியாளர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்க, புதிய செயலியை தொடங்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.