வாஷிங்டன்

மெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகப் பலரும், கூறி வருகின்றனர்.  ஆனால் அதற்கான தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காததால் அது சமூக பரவலை அடைந்துள்ளது.   எனவே கொரோனா பாதிக்கப்பட்டோரிடம் இருந்து இந்த பரவலை உடனடியாக தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி பல கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அமெரிக்காவின் அட்லண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த தகவலை அமெரிக்க நேச்சர் மைக்ரோ பயாலஜி என்னும் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தின் பெயர் மோல்னுபிராவிர் (Molnupiravir) ஆகும்.

இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கும் அது தீவிர நோயாக மாறுவதைத் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.   மேலும் இந்த மருந்து 24 மணி நேரத்தில் செயல்பட தொடங்கிப் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து தொற்று பரவுவதை தடுக்கும் என்பதால் நோயாளிகள் அதிக தினங்கள் தனிமையில் வைக்கப்படத் தேவை இல்லாத நிலை ஏற்பட உள்ளது.

தற்போது இந்த மருந்து இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக குடிந்து இறுதிக்கட்ட பரிசோதனை நடைபெறுவதாச்க  தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த மருந்து 12 மணி நேரத்துக்கு ஒரு டோஸ் என மூன்று டோஸ்களாக அளிக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது எனவும் மருத்துவ இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.