வெளிநாட்டு பீரா இத படிங்க மொதல்ல…

அமெரிக்காவில் உள்ள கொலரடா பகுதியில் BUDWEISER என்ற பிரபல நிறுவனத்தின் பீர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியின் பீர், சர்வதேச புகழ் பெற்றது.இந்த கம்பெனியின் பீர்களை பலர் விரும்பி குடிப்பார்கள்.

அந்த பீர் ஆலையில்  12 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார், வால்டர் பவுல் என்பவர்.

வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தால் மட்டுமே சாப்பிடக்கூடிய அளவுக்கு இவர் பெரிய சோம்பேறி.

பீர் ஆலையில் வால்டர் செய்யும் காரியத்தை அவர் வார்த்தைகளில் பதிவு செய்யலாம்:

‘’நான் இந்த பீர் ஆலையில் ஆரம்பத்தில் பீர் நிரப்பும் தொட்டியின் ( பீர் டேங்க்) கீழே உள்ள யூனிட்டில் வேலை பார்த்தேன். மூத்த அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டதால், பீர் தொட்டியின் உச்சி யூனிட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கழிப்பறை ரொம்ப தூரத்தில் உள்ளது. நான் இயல்பாகவே ஒரு சோம்பேறி. இதனால் ‘அவசரத்துக்கு ‘’ பீர் தொட்டியில் சிறுநீர் கழித்து விடுவேன்’’ என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார் வால்டர்.

 இதனால் அவர்  வருத்தம் அடைந்ததில்லையா?

‘’ வருத்தம் உண்டு. எனக்கு வேண்டியவர்கள் பீர் குடிப்பதை பார்க்கும் போது சங்கடமாக இருக்கும்’’ என்கிறார், வால்டர்.

-பா.பாரதி.