வாஷிங்டன்

மெரிக்க அரசு நிறுவன ஆய்வறிக்கை மோடி அரசு ஜாதி மற்றும் மதக்கலவரத்தை கட்டுப்படுத்த ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அரசு நிறுவனமான சர்வதேச மத சுதந்திர ஆணையம் கடந்த 2017 ஆண்டின் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.  இவ்வகையில் மதச் சுதந்திரம் முழுமையாக உள்ள நாடுகளை முதல் தர வரிசையில் அமைத்துள்ளது.   இரண்டாம் தர வரிசை நாடுகள் என்றால் ஏதாவது ஒரு வகையில் ஒரு சில மதங்களுக்கு எதிராக கலவரம் நடக்கும் நாடுகள் எனப் பொருள் ஆகும்.   மூன்றாம் தர வரிசை நாடுகள் ஒரு மதத்தை மட்டும் ஆதரித்து மற்ற மதங்களுக்கு சுதந்திரம் வழங்காமல் இருக்கும் நாடுகள் ஆகும்.

இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பெஹ்ரைன், க்யூபா, எகிப்து, இந்தோநேசியா, ஈராக், கஜகஸ்தான்,  லாவோஸ், மலேசியா, மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளை இரண்டாம் தர வரிசை நாடுகளாக அறிவித்துள்ளது.   பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் மூன்றாம் தர வரிசை நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா இரண்டாம் தர வரிசையில் உள்ளதற்கு மோடியின் அரசை இந்த அறிக்கை குற்றம் சாட்டி உள்ளது.  “கடந்த 2017 ஆம் ஆண்டு தலித்துக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவர் மீது நடந்த தாக்குதலை தடுக்க மோடி அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.    பிரதமர் மோடி மத வன்முறைகளை எதிர்த்த போதிலும் அவரது கட்சியினர் பலர் இந்து மத தீவிரவாதிகளை வெகுவாக ஆதரித்துள்ளனர்.

கட்சியினர் பலர் மற்ற மதங்களின் மீது வெறுப்பான வார்த்தைகளை பேசி உள்ளனர்.  கடந்த இரு வருடங்களாகவே இனக் கலவரங்கள் அதிகரித்த போதும் இது குறித்து மோடி அரசு எதுவும் கூற விரும்பவில்லை.    பல மதக் கலவரங்களுக்கு காரணம் பாஜகவினரின் மற்ற மதம் குறித்த கருத்துக்கள் ஆகும்.   இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்கபடவில்லை.

பசுப் பாதுகாவலர்களாம் கடந்த 2017 ஆம் வருடம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.    இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.   இந்த நடவடிக்கைகளால் இந்துக்கள் அல்லாதோர் மட்டுமின்றி இந்து மதத்தை சார்ந்த தலித்துக்களும் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.   பொதுவாக இஸ்லாமியர்களும் தலித்துக்களும் பல இடங்களில் தாக்கப்பட்டதற்கு மோடி அரசு மௌனமாகவே இருந்துள்ளது”  என இந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.