மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து ஹோண்டுராஸின் சான் பெட்ரோ நகருக்கு சென்ற கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்றுள்ளது.

சான் பெட்ரோவுக்குச் சென்ற சிறிய ரக விமானத்தில் நடுவானில் இந்த சம்பவம் நடந்தது, அப்போது 49 வயதான சந்தேக நபர் பயணிகளை கத்தியால் தாக்கத் தொடங்கினார், இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

பின்னர் அவர் சக பயணியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் அமெரிக்க குடிமகன் அகின்யேலா சாவா டெய்லர் என அடையாளம் காணப்பட்டதாக பெலிஸ் காவல்துறை ஆணையர் செஸ்டர் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

டெய்லரை சுட்டுக் கொன்ற பயணியை ஹீரோ என்று பாராட்டிய கமிஷனர் வில்லியம்ஸ், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட டெய்லர் எப்படி விமானத்தில் கத்தியை கொண்டு வந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.

சம்பவம் தொடர்பான தற்போதைய விசாரணையில் உதவிக்காக பெலிசிய அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

[youtube-feed feed=1]