H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது.
வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த நடவடிக்கை “நியாயமற்றது”, சட்டப்படி தவறானது மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்றம் $100,000 கட்டணத்தை நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆண்டுக்கு 85,000 திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவில் 71% சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும் அதில் குறிப்பாக தொழில்நுட்ப, பொறியியல், சுகாதார அறிவியல் போன்ற துறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
“முன்பு H-1B விண்ணப்பங்களுக்கு $3,600 க்கு குறைவாகவே செலவாகும், ஆனால் புதிய கட்டணம் $100,000 என்று உயர்த்தப்பட்டுள்ளது அமெரிக்க குடியேற்றச் சட்டத்திற்கு முரண்படானது.
தொழில்முனைவோர் உண்மையான செயலாக்க செலவுகளை மட்டும் செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
வெளிநாட்டு திறமைகளை தடுக்காமல், உள்நாட்டு தொழில்நுட்ப விரிவாக்கத்தை ஆதரிக்க வேண்டும்.” என்று சிலிக்கான் வேலி முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.