கொழும்பு
இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 8.45 மணியில் இருந்து இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் இலங்கை காவல் துறை தெரிவித்தது. அத்துடன் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 7 மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரில் இருவர் மரணம் அடைந்ததாகவும் 5 பேர் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு குரித்து சுமார் 10 நாட்களுக்கு முன்பே இந்தியா தகவல் அனுப்பி உள்ளது. இலங்கை காவல்துறை தலைவர் இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பி உள்ளார். ஆயினும் இலங்கை போதிய கவனம் செலுத்தாததால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா ஒரு எச்சரிக்கை தகவலை அளித்துள்ளது. இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இந்த தாக்குதல் சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்கள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களை குறிவைத்து நடத்தப்படலாம் என அமெரிக்கா கூறி உள்ள்து. மேலும் இலங்கை செல்லும் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.