உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 1000வது நாளை எட்டியது. இந்த போரில் இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா எந்த ஒரு ராணுவ உதவியும் செய்யாமல் உக்ரைனுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உக்ரைனிடம் வழங்கிய அமெரிக்க ராணுவ தளவாடங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென அனுமதி வழங்கி உள்ளார்.

33 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் உக்ரைன் பலவீனமடைந்து வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த திடீர் அனுமதி ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை மூலம் இழந்த தங்கள் நாட்டின் பகுதிகளை மீட்க மட்டுமே உதவும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், ஜோ பைடனின் இந்த முடிவை அடுத்து தனது அணுஆயுத பயன்பாடு குறித்த கொள்கையில் மாற்றம் செய்து கையெழுத்திட்டுள்ள ரஷ்ய அதிபர் புடின், அணுஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டின் ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டின் மீது அணுஆயுதத்தை பயன்படுத்த அனுமதி வழங்கி கொள்கையில் மாற்றம் செய்துள்ளார்.

அணு ஆயுத பயன்பாடு குறித்த ரஷ்யாவின் இந்த எச்சரிக்கையையும் மீறி சுமார் 300 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணையான ATACMS ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் முக்கிய நிலையில் உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், ரஷ்யா-வின் அணுஆயுத பயன்பாடு குறித்த பேச்சு பொறுப்பற்றது என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.