வாஷிங்டன்:

ப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,  பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு எதிரான தடுப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஹார்பூன் வான்வழி ஏவுகணைகள் மற்றும் 155 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மார்க் 54 இலகுரக டார்பிடோக்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் இந்தியாவை தனது  முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக  அமெரிக்கா அங்கீகரித்தது.  இதன் மூலம்,   அமெரிக்காவின் மிக நெருக்கமான தொழில்நுட்பத்திற்கு இணையாக அமெரிக்காவிலிருந்து மேம்பட்ட மற்றும் திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை வாங்கி கொள்ள, இந்த கூட்டாளி நாடுகள் வாங்கி கொள்ள முடியும்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள இருவேறு அறிக்கைகளில்,   10 ஏஜிஎம் -84 எல் ஹார்பூன் பிளாக் II ஏவுகணை ஏவுகணைகளை 92 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், 16 எம்.கே 54 ஆல் அப் ரவுண்ட் லைட்வெயிட் டார்பிடோக்கள் மற்றும் மூன்று எம்.கே 54 உடற்பயிற்சி டார்பிடோக்கள் 63 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ராணுவ ஆயுதங்களையும் வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தை அடுத்து  அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த தீர்மானத்தை மேற்கொண்டது.

இதுகுறித்து பென்டகனின் வெளியிட்டுள்ள தகவலில்,  ஹார்பூன் ஏவுகணை சிஸ்டம் பி -8 ஐ ஆன்டிசுப்மரைன் போர் விமானத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, முக்கியமான கடல் பாதைகளை பாதுகாப்பதற்காகவும்,  மேற்பரப்பு போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.  அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடனான படைகளுடன் இயங்கக்கூடிய தன்மையை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய திறன்களை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இந்தியா இந்த ஆயுதங்களை பயன்படுத்தும்.  இந்த ஆயுதங்களை இந்தியா, தனது ராணுவத்தில் இணைத்து கொள்வதில்  எந்த சிரமம் இருக்காது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.