வாஷிங்டன்:
ந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், பல லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக மாலத்தீவுகள் பூடான் வங்கதேசம் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் இந்த செயல் இந்தியா உண்மையான நண்பனாக அண்டை நாடுகளிடம் நடந்து கொள்வதை வெளிப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்திய அனுப்பி வைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுக்கு மொத்தமாக 3.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.