வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவா இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.32 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது அமெரிக்கா.
மேலும் ஜமாத்-உல்-கஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல்வாலி மற்றும் லஷ்கர்- இ-இஸ்லாம் தலைவர் மங்கள் பஹ் குறித்து தகவல் தருவோருக்கு தலா ரூ.20 கோடி பரிசு வழங்கப்படும் என்றும், ஆக மொத்தம் ரூ.72 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் அமெரிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கர வாதிகளை தீவிரமாக வேட்டையாடி வருகிறது அமெரிக்கா. ஏற்கனவே பயங்கரவாதி பின்லேடனை ஒழித்துக்கட்டிய நிலையில், பாகிஸ்தானின் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.32 கோடி பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், ஜமாத்-உல்-கஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல்வாலி மற்றும் லஷ்கர்- இ-இஸ்லாம் தலைவர் மங்கள் பஹ் குறித்து தகவல் தருவோருக்கு தலா ரூ.20 கோடி பரிசு வழங்கப்படும் என்றும், ஆக மொத்தம் ரூ.72 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் அமெரிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 150 பள்ளி குழந்தைகளை கொன்றவன். மேலும் 2012-ம் ஆண்டில் பள்ளி மாணவி மலாலா பூசுப்சாயை சுட்டுக்கொல்ல முயன்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.