விழுப்புரம்: நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் வில்லியம் லேஅவுட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர்  சுசீந்திரன் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பிரமிளா (52). அவரது கணவர் நடிகை ஊர்வசியின் தம்பி கமல். கமலுக்கும் பிரமிளாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் தனித்தனியே வாழ்த்து வருகின்றனர்.

இதனால், பிரமீளா தனது சகோதர் சுசீந்திரன் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.  அங்கு தனது அண்ணனுன் வசித்து வருகிறார். ஆனால், சரியான வேலை இல்லாததால், இருவரும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  நேற்று காலை அவர்களது வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்த வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தனித்தனி அறைகளில் சுசீந்திரனும், பிரமிளாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன.

இதையடுத்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அந்த வீட்டில்  சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்திருந்த  கடிதம் கிடைத்தது. அதில்,  வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களின் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. வீட்டுக்கு வாடகை செலுத்தமுடியவில்லை.  வீட்டிலுள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கிவிடுங்கள். எங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமையில் பிரமிளாவுக்கு நடிகை ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பணா பணம் உதவி செய்து வந்ததாகவும், ஆனால் அவர் இறந்த பின்பு வேறு யாரும் உதவ முன்வராததால், வறுமை காரணமாக  பிரமிளாவும், சுசீந்திரனும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது