ரங்கீலா படம் மூலம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஊர்மிளா, இந்தியன் படம் மூலம் தமிழகத்தில் அறிமுகமானார்.
படங்களை குறைத்து விட்டு, அரசியல் களத்தில் குதித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
உள்ளூர் கட்சிகாரர்களுடன் மோதல் ஏற்பட்டதால், அங்கிருந்து விலகி சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.
அவருக்கு எம்.எல்.சி. பதவி கொடுப்பதாக சிவசேனா வாக்குறுதி அளித்துள்ளது.
ஒரு வெப் தொடரில் நடிக்க ஊர்மிளா ஒப்புக்கொண்டிருந்தார். கொரோனா காரணமாக அந்த தொடரின் ஷுட்டிங், ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது அந்த தொடர் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரிய திரையில் நடிக்க ஊர்மிளாவை தேடி வாய்ப்பு வந்துள்ளது.
“இந்த படம் எனக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்” என்கிறார், ஊர்மிளா.
– பா. பாரதி