சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. கோவை மாநகராட்சியில் முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதனால் 21 மாநகராட்சிகளும் திமுக வசமாகுகின்றன.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. சென்னை, ஆவடி, .தாம்பரம்,.காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர்,.மதுரை, .திண்டுக்கல், சிவகாசி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், ஒசூர் ஆகிய 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் திமுக 33 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் முடிவுகள் வெளியான 8 இடங்களில் 6 இடங்களில் திமுக, காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவை 4, 7, 31, 37, 62, 76வது வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. திமுக 11 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றார். அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி தோல்வியடைந்தார்.
5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி பெற்றுள்ளார்.
71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அழகு ஜெயபால் வெற்றிபெற்றுள்ளார்.
76வது வார்டில் திமுக வேட்பாளர் பி.ராஜ்குமார் வெற்றிபெற்றார். வெற்றி சான்றிதழில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
திருச்சி உள்ள 62 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
சேலம் உள்ள 60 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
திருப்பூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
தாம்பரம் உள்ள 70 வார்டுகளில் திமுக 9 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
காஞ்சிபுரம் உள்ள 50 வார்டுகளில் திமுக 4 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளில் திமுக 15 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
ஈரோட்டில் உள்ள 60 வார்டுகளில் திமுக 6 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
வேலூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
நெல்லையில் உள்ள 55 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் திமுக 3 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
ஓசூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.
கரூரில் உள்ள 48 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
கடலூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
சிவகாசி உள்ள 48 வார்டுகளில் திமுக 4 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 6 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
கும்பகோணம் உள்ள 48 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.