சென்னை:
தி.முக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வரும் 6ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வது முடிவடைந்தது.இதனையடுத்து தி.முக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதன்படி வரும் 6 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் கடலூர், சேலம், ஈரோடுகோவை, மற்றும் நெல்லை மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து காணொளி மூலம் பிரசாரம் செய்ய உள்ளார்.