சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில், தெலுங்கானா ஆளுநர், அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையர், நடிகர் விஜய் உள்பட ஏராளமானோர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளில், 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையைற்றி வருகின்றனர்.
வாக்குப்பதிவையொட்டி, விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் வந்து வாக்களித்தார் .
விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் பொன்முடி தனது ஜனநாயக கடமையை செய்தார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை வள்ளுவர் கோட்டம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.