புதுடெல்லி:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கனிஷக் கட்டாரியா என்ற மாணவர் நாட்டிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.


மும்பை ஐஐடியில் பிடெக் படித்த கனிஷக் கட்டாரியா மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேஷ்முக் என்ற மாணவி 5-வது ரேங்க் பெற்றார்.

இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்கு 759 மாணவ, மாணவிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாரியா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கணிதப்பாடம் என்றால் உயிர். மும்பை ஐஐடியில் பிடெக் படித்தார்.

பெண்களிலேயே அதிக மதிப்பெண் பெற்ற சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக் பிஇ கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.இவர் போபாலை சேர்ந்தவர்.