முதலிடம் பிடித்த அனுதீப் துரிஷெட்டி

டில்லி:

டந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.  இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வு  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 3 பிரிவுகளாக நடத்தப்பட்டு வரும்  இந்த தேர்வை  மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் நாடு முழுவதும் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றது. சுமார் 11 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் மாதம், நவம்பர் மாதமும் தேர்வுகள் நடைபெற்றன.

அதையடுத்து இந்த ஆண்டு (2018) பிப்ரவரியில் நேர்முக தேர்வுகள் நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் அறிக்கப்பட்டு உள்ளன.

அதில், ஐதராபாத்தைச் சேர்ந்த துரிஷெட்டி அனுதீப் என்ற ஓபிசி பிரிவை சேர்ந்தவர்  முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 240 பெண்கள், 750 ஆண்கள் உள்பட 990 பேர் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பதவி இடங்கள் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.