ராஞ்சி: அரியானா முதல்வர் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை  ராஜினாமா  செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து,  கட்டார் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ல் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் மாநில முதலமைச்சராக 2வது முறையாக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை செயல்பட்டு வந்தது. இந்த அரிரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மாநில  அமைச்சரவை கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளது.

ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றதால் அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.  இதன் காரணமாக மனோகர் லால் கட்டார் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், கூண்டோடு பதவி விலகியுள்ளனர். இதைத்தொடர்ந்து விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அங்கிருந்து வந்த தகவல்களின்படி,  அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் மதியம் 1:00 மணியளவில் ஹரியானா ராஜ் பவனுக்குச் செல்வார்கள். பாஜக எம்எல்ஏக்கள் தவிர, ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களும் ராஜ்பவனுக்கு வருவார்கள். ஹரியானா ராஜ்பவனில் உள்ள மாநாட்டு அறையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஹரியானா அரசில் பாஜக மற்றும் ஜேஜேபி இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், முதல்வர் மனோகர் லால் கட்டார் பாஜக மற்றும் அரசு ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 11:30 மணிக்கு ஹரியானா இல்லத்திற்கு பாஜக மற்றும் அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களை முதல்வர் அழைத்திருந்தார். இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்கும் என தெரிகிறது.

இதற்கிடையில், சுவாரஸ்யமாக, ஹரியானா அரசியலில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், துஷ்யந்த் சவுதாலாவும் காலை 11 மணியளவில் டெல்லியில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் துஷ்யந்த் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, JJP தனது வேட்பாளர்களை ஹிசார் மற்றும் பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதிகளில் நிறுத்த விரும்புகிறது.

ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்பி பிரிஜேந்திர சிங், பாஜகவில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, மனோகர் லால் கட்டார்,  வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கர்னல் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.