ந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால்  செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.
அருகில் அமைந்த கோயில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் (2 கி.மீ.) ஆமாம்?  அதென்ன பெயர் ? உப்பிலி?
வருவோம் அந்தக் கதைக்கு     இப்போது…
இந்தக் கோயிலின் பழங்காலத்துப் பெயர் திருவிண்ணகர் என்பதாகும். இவருக்கு ஒப்பாக யாரும் இல்லை என்பதால் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
ஆகவேதான் ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது.
காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலி யப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.

ஒரு முறை வைகுண்டத்தில் பூமாதேவி பெருமளிடம் தனக்கு அவரின் ஹிருதய கமலத்தில் அமரும் பாக்கியம் கிட்டாதது பற்றி குறைபட்டுக்கொண்டார். தாயாருக்கு சமமான பெருங்குனங்கள் இருப்பினும் தான் தாயாருக்கு நிகரான மதிப்பு கிடைக்க பெறாதது பற்றி மனம் வருந்தினார்.
கனிவுள்ளங்கொண்ட பெருமான், மார்கண் டேய மகரிஷியின் மகளாக பூமாதேவி அவதரிக்கும் சமயம் அப்பாக்கியம் கிடைக்க பெரும் என்றும் வரமளித்தார்.
முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தை யைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமண வயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி விதம் விதமாக் கூறியும் கேட்கவில்லை.
” என் மகள் ரொம்பவும் சின்னப் பெண், சரியான அளவு உப்புப் போட்டு சமைக்கக்கூட அவளுக்குத் தெரியாதே?” என கூறினார்.
வந்திருப்பது திருமாலாயிற்றே? விட்டுவிடுவாரா?
செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்துத் தாயாரை மணம் முடித்தார்.
மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திரு கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படு கிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.
திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு அங்கு செலுத்த முடியாத பிரார்த்தனை இங்கு செலுத்தலாம் என்று சிலர் சொல்வார்கள்
இங்கு அனுமார் சன்னிதி மிகவும் பிரசித்தம், பெருமாளுக்கு நேராக உள்ள கருடன் சன்னிதியுடன் உப்பு அனுமதி நின்றுவிடும், இங்கு உப்பு மிளகு போட்டுப் பிராத்தனை நிறைவேற்றலாம்,
அழகிய குளத்தை மிக நன்றாய்ப் பராமரிக்கிறார்கள்.  இது அஹோத்ர புஷ்கரிணி தீர்த்தம் ஆகும்,
மூலவர் ஒப்பிலியப்பன் என்று பார்த்தோம், உற்சவர் பொன்னப்பன், தாயார் பூமா தேவி, நீள நெடுக உயர்ந்து நிற்கும் பெருமாள் அடுகில் அமர்ந்திருக்கும் பூமா தேவி மற்றும் மார்க்கண்டேயரின் பிரம்மாண்ட தோற்றம் மனம் நிறைப்பதாக உள்ளது.
இங்க வைகானஸ ஆகமம் பின்பற்றப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாட்களில் பகல் 11.00 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்ய லாம். இத் திருநாட்களில் உண்ணா நோன்பிருந்து, நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்து பின்னர் அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இவ் விரதத்தை சிரவண நாட்களில் தங்களது வீட்டிலும் கடைபிடிக்கலாம்.
கேரள குருவாயூரை போன்று இங்கும் பிரார்த்தனை துலாபாரம் உள்ளது. பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் ( உப்பு தவிர ) இங்கு காணிக்கை செலுத்தலாம்.
Also read