டெல்லி

நேற்று இந்தியாவில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக யுபிஐ சேவைகள் முடங்கியது/

பொதுவாக இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யு.பி.ஐ. (UPI) மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தற்போது கிராமங்களில் கூட தற்போது பணப்பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இந்தியாவில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யு.பி.ஐ. சேவை முடங்கியது. எனவே பயனர்கள் கடும் அவதியடைந்தர்.  நாடெங்கும்யு.பி.ஐ. சேவைகள் செயலிழந்ததால், கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர்.

நேற்று இரவு 7 மணி முதல் யு.பி.ஐ. செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளதாக பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சேவை செயல்பட்டு வருகிறது.