சமீபத்தில் நடிகர் சூர்யாகொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனது அண்ணன் சூர்யா, நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாக நடிகர் கார்த்தி தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், அண்ணன் பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளார். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் இருப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.