டில்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக குமாரசாமி இன்று சந்தித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கவுள்ளது. இதில் முதல்வராக குமாரசாமி நாளை மறுநாள் பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் குமாரசாமி இன்று டில்லி சென்றார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரிடமும் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.